அக்ரி-பவர் விசேட நிலையான வைப்புத் திட்டம்இலங்கையின் விவசாயத் துறையின் மேம்பாட்டிற்குப் பங்களிக்கவும், நிலையான தேசிய எதிர்காலத்தை ஆதரிக்கவும் மற்றும் வட்டி வருமானத்தை ஈட்டுவதற்கும் தேசப்பற்று மற்றும் சமூகப் பொறுப்புள்ள பெருநிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
தகுதிகள்
- 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்
- இலங்கை வதியாத இலங்கைப் புலம் பெயர் ஊழியர்கள்
- இலங்கையில் முறையாக பதிவு செய்யப்பட்ட/ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனம்
அம்சங்கள்
2 வருட அக்ரி பவர்- நிலையான வைப்புத் திட்டம்
காலப்பகுதி 2 வருடங்கள்
ஆகக்குறைந்தது 5,000/- ரூபாய்
| வட்டிக் கொடுப்பனவு | மாதாந்த வட்டிக் கொடுப்பனவு | முதிர்வின் போதான வட்டிக் கொடுப்பனவு |
|---|---|---|
| பெயரளவு வீதம் | ஆண்டுக்கு5.00% (AER 5.12%) | ஆண்டுக்கு5.50% (AER 5.36%) |
| வட்டிக் கொடுப்பனவு | CASA இற்கு மாற்றுதல் | CASAஇற்கு மாற்றுதல் அல்லது மூலதனமாக்கல் |
4 வருட அக்ரி-பவர் நிலையான வைப்புத்தொகை
காலம்: 4 ஆண்டுகள்
ஆகக் குறைந்தவைப்பு 5,000/-
| வட்டிக் கொடுப்பனவு | மாதாந்த வட்டிக் கொடுப்பனவு | முதிர்வின் போதான வட்டிக் கொடுப்பனவு |
| பெயரளவு வீதம் | ஆண்டுக்கு 5.25% (AER 5.38%) | ஆண்டுக்கு 6.00% (AER 5.53%) |
| வட்டிக் கொடுப்பனவு | CASA இற்கு மாற்றுதல் | CASAஇற்கு மாற்றுதல் அல்லது மூலதனமாக்கல் |
மேலதிக நன்மைகள்
- விவசாயத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்கான சிறப்பு அங்கீகாரக் கடிதம்
- இணைய வங்கிச் சேவை மற்றும் ஸ்மாட் பாஸ்புக் வசதிகள்
- முதிர்வின்போது இலத்திரனியல் கூற்றுகள் அல்லது அச்சிடப்பட்ட கூற்றுகள்
- தானியங்கி புதுப்பித்தல் வசதி
- ஒரே வாடிக்கையாளர் பல அக்ரி--பவர் நிலையான வைப்புக் கணக்குகளைத் திறக்கலாம்
- வைப்புத் தொகை மீதான கடன்/முற்பண வசதிகள் (வங்கியின் வழிகாட்டுதல்களின்படி)
முக்கிய நிபந்தனைகள்
- குறைந்தபட்ச வைப்புத்தொகை 5,000/- ரூபாய்
- இலங்கை ரூபாயில் மட்டுமே திறக்க முடியும்.
- முதிர்வு காலத்தில் பணத்தை மீளப்பெறவிட்டால், வைப்புத்தொகை அதே காலத்திற்குத் தானாகவே புதுப்பிக்கப்படும்.
- புதுப்பிக்கும்போது, நடைமுறையிலுள்ள வட்டி விகிதத்தை கணினி முறைமை ஒழுங்குபடுத்தும்
அக்ரி-பவர் நிலையான வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்து, உங்களது சேமிப்பைப் பெருக்குவதோடு இலங்கையின் விவசாய எதிர்காலத்திற்கும் ஆதரவளியுங்கள்.

