காசுக் கட்டளைகள், வெளிநாட்டு வரைவுகளை வழங்குதல்

  • வாடிக்கையாளர்கள் இலங்கை ரூபாயில் உள்நாட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசுக் கட்டளைகளையும் சர்வதேச கொடுப்பனவுகளுக்கான வெளிநாட்டு வரைவுகளையும் பெறமுடியும்.

மேலதிகத் தகவல்களுக்கு,
011-2203107, 011-2203120 
Email:csm660@boc.lk

காசோலைகள் மற்றும் வரைவுகளின் தீர்வை

இலங்கை வங்கியில் விரைவான காசோலை மாற்றல் செயற்பாடு 

  • இலங்கை வங்கிக் கிளைகளில் பெறப்பட்ட காசோலைகள் இலங்கை வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் வைப்புச் செய்யப்பட்டால் அதே நாளில் பணமாக மாற்றப்படும். அதே நேரம் ஏனைய வங்கிக் காசோலைகள் அடுத்த தினத்தில் பணமாக மாற்றப்படும்.

மேலதிகத் தகவல்களுக்கு 
011-2203124
011-2203118 
Email:corp@boc.lk

இலங்கை வங்கியின் I-net வசதி 

வாடிக்கையாளர்கள் தமது நடைமுறைக் கணக்கு செயற்பாடுகளை இணைய வழியாக அவதானிக்க முடியும். 

இணைய மற்றும் கைப்பேசி வங்கிச் சேவை 
இலங்கை வங்கியின் இணைய வங்கி முறைமையானது வாடிக்கையாளர்களுக்காக முழுமையான இணைய வங்கிச் சேவைகளை வழங்குகின்றது. 
சேவைகள் 

  • BOC மற்றும் BOC அல்லாத கணக்குகளுக்குப் பணம் அனுப்பும் வசதி 
  • EPF / ETF கொடுப்பனவுகள் 
  • SLPA மற்றும் சுங்க கொடுப்பனவுகள் 
  • நிர், மின்சார பட்டியற் கொடுப்பனவுகள் 
  • கடனட்டைக் கொடுப்பனவு 
  • கணக்குமீதியை விசாரிக்கும், பார்க்கும் வசதி
  • RDA மீள் நிரப்பல்கள்
  • காப்பீட்டுக் கொடுப்பனவுகள்
  • கணக்குக் கூற்றைப் பதிவிறக்கும் வசதி

மேலதிகத் தகவல்களுக்கு 
011 2203117 
corp@boc.lk

மின்னணுக் கூற்று வசதி 

  • வாடிக்கையாளர்கள் அவர்களது இணக்கக் கூற்றுக்கள் மற்றும் கணக்காய்வு நோக்கங்களுக்காக மின்னணுக் கூற்று ஒன்றினை மின்னஞ்சலின் ஊடாக இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். 

சேகரிப்புக் கணக்குகள் 
 

  • இலங்கை வங்கியின் சேகரிப்புக் கணக்குகள் கரும பீடங்கள் ஊடாகவும் டிஜிற்றல் வழிகள் ஊடாகவும் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதியையும் புதிய கருவிகளைப் பயன்படுத்தி சரியான நேரத்தில் துல்லியமாகவும் வினைத்திறனாகவும் கொடுப்பனவுகளைச் செயற்படுத்துவதற்கான வசதியையும் வழங்குகின்றது.
  • இலங்கை வங்கியினால் பெரு நிறுவன வாடிக்கையாளர்களின் வாடிக்கையாளர்களால்  வைப்புச் செய்யப்படும் பணத்தைப் பெற்று கொடுப்பனவுகளை இணையத்தளத்தில் இற்றைப்படுத்தும் வகையில் நிகழ் நேர அடிப்படையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளவும் முடியும்.

மேலதிகத் தகவல்களுக்கு
011 2203103,  0112203108
Email: om660@boc.lk

நிலையியற் கட்டளைகள்

நிலையியற் கட்டளையின் நன்மைகள்

உங்களிடம் மாதாந்தக் கொடுப்பனவுகள், நிலையான பண அனுப்பல்கள் அல்லது வேறு நிலையான கொடுக்கல் வாங்கல்கள் இருந்தால் அவற்றத் தானியங்கி முறையில் தவணைக் கொடுப்பனவுகளாகச் செலுத்துவதற்கான வசதியினை இலங்கை வங்கி வழங்குகின்றது.

  • எந்தவொரு கொடுப்பனவோ அல்லது விலைப்பட்டியலோ கோரப்பட்டபடி தானாகவே செலுத்தப்படும். 
  • எவ்வளவு பணத்தை எப்போது செலுத்த வேண்டும் என்பதை வங்கிக்குத் தெரிவிக்கலாம். 
  • நீங்கள் விரும்பும் வேளையில் நிலையியற் கட்டளையை ரத்து செய்ய முடியும். 
  • உங்கள் வாடகை, காப்புறுதிக் கட்டணம், விலைப்பட்டியல் கொடுப்பனவு, சந்தாக் கட்டணம் போன்ற நிலையான செலவினங்களைச் செலுத்துவதற்கு நிலையியற் கட்டளைகள் பயன்படுகின்றன.

தகைமைகள்
இலங்கை வங்கியில் கணக்கு வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.

ஆவணங்கள் 

  • S/O விண்ணப்பம்
  • சபைத் தீர்மானம்
  • ஏனைய தொடர்புடைய ஆவணங்கள்

விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்  (தற்போதைய விகிதங்கள் மற்றும் கட்டணத்தின் படி மாற்றத்திற்கு உட்பட்டவை)

ஐக்கிய அமெரிக்க டொலர் (USD) தீர்வு 
 

  • வாடிக்கையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் வெளிநாட்டு வரைவுகளின் வருவாய்களைத் தீர்க்க ஐ.அ.டொலர் தீர்வு முறைமை ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியும். வெளிநாட்டு வரைவுகள் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படி தீர்க்கப்படுகின்றன.

மேலதிக விபரங்களுக்கு
011 2203120
Email: csm660@boc.lk

நிதி முகாமைத்துவம் 
 

  • நீங்கள் உங்கள் கூடுதல் பணத்தின் மீது வருமானம் ஈட்டக் கூடிய வகையில் நாளாந்தம் நடைமுறைக் கணக்குகளில் உள்ள மிகை நிதியை ஒரு விசேட வைப்புக் கணக்கிற்கு மாற்றுவதற்கான சேவையை அல்லது விசேட வைப்புக் கணக்கில் உள்ள மிகையை நடைமுறைக் கணக்குக்கு மாற்றுவதற்கான சேவையை வங்கி வழங்குகிறது.

மேலதிகத் தகவல்களுக்கு
011-2203107, 011-2203104
Email:csm660@boc.lk


 

 

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444