இலங்கை வங்கி : அணுகல்தன்மை மற்றும் பாகுபாடின்மை கொள்கை

1. அறிமுகம்

இலங்கை வங்கியில், சமூக அந்தஸ்து, உடல் திறன், திருமண நிலை, இனம், சாதி, பாலினம், வயது, மதம் அல்லது நிதி அறிவு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நியாயமான மற்றும் சமமான முறையில் வழங்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நிதிசார் உள்ளீர்ப்புத் தன்மையை மேம்படுத்துவதும், எங்கள் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் எங்கள் சேவைகள் எளிதில் சென்றடைவதை உறுதி செய்வதும் எங்கள் நோக்கமாகும்.
 

2. பாகுபாடின்மை குறித்த எங்கள் கடமைப்பாடு

நிதிச் சேவைகளை வழங்குவதற்குத் தொடர்பில்லாத காரணங்களுக்காக வங்கி நிதி நுகர்வோரை பாகுபடுத்தாது. ஒவ்வொரு தனிநபரும் எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அணுகுவதற்கும், அதன் மூலம் பயனடைவதற்கும் சமமான வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்வதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

குறிப்பு: இந்த கொள்கையானது குறிப்பிட்ட மக்கள்தொகை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு அல்லது பிரத்யேக தயாரிப்புகளை வழங்குவதிலிருந்து வங்கியைத் தடுக்காது.

 

3. அணுகல்தன்மை குறித்த கடமைப்பாடுகள்

பின்வரும் முன்முயற்சிகள் மூலம் அனைத்து வங்கிச் சேவைகளுக்கும் நியாயமான மற்றும் சமமான அணுகலை வழங்க நாங்கள் அர்ப்பணித்துள்ளோம்:

 

3.1 பௌதீக அணுகல்

(அ) கட்டமைப்பு: மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வாடிக்கையாளர்களுக்கு உள்ளடக்கிய வகையில் எங்கள் பௌதீகக் கட்டமைப்பை அமைப்பதன் மூலம், அணுகல்தன்மை தொடர்பான அனைத்து பொதுச் சட்டங்களுக்கும் நாங்கள் இணங்குகிறோம்.

(ஆ) தன்னியக்கப் பணப்பரிமாற்ற இயந்திரம் மற்றும் தானியங்கி உபகரணங்கள்: எங்கள் தன்னியக்கப் பணப்பரிமாற்ற இயந்திரங்கள் மற்றும் தானியங்கி உபகரணங்களில் திரை வாசிப்பு வசதிகள் (screen readers) மற்றும் பிற உதவி அம்சங்களை இயக்குவதன் மூலம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அணுகல்தன்மையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.

(இ) அணுகக்கூடிய அட்டைகள்: தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு, கோரிக்கையின் பேரில், அணுகல்தன்மை அம்சங்களைக் கொண்ட பற்று மற்றும் கடன் அட்டைகளை வழங்க நாங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.


3.2 எண்ணிம அணுகல் 

(அ) இணைய அணுகல்: எங்கள் இணைய உள்ளடக்கமானது உணரக்கூடிய, செயல்படக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் வலுவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் எழுத்துரு அளவு சரிசெய்தல், வண்ண மாறுபாடு அமைப்புகள், முழு விசைப்பலகை வழிசெலுத்தல் மற்றும் திரை வாசகிகளுடன் இணக்கத்தன்மை ஆகியவை அடங்கும்.

(ஆ) கைபேசி செயலிகள்: எங்கள் மொபைல் வங்கிச் செயலிகள், எழுத்துரு மற்றும் வண்ண மாற்றங்கள், முழு வழிசெலுத்தல் மற்றும் திரை வாசிப்பு மென்பொருளுடன் இணக்கம் போன்ற அணுகல் அம்சங்களை உள்ளடக்கிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.


3.3 தகவல் அணுகல் 

(அ) ஆவணங்கள்: அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் 

மற்றும் நிபந்தனைகள் மற்றும் எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்து தகவலறிந்த முடிவுகளை எடுக்க போதுமான தகவல்கள் வழங்கப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்.

(ஆ) உதவி: வாடிக்கையாளர்கள் தங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து அதிகாரம் அளிக்கும் கடிதம், அதிகாரத் தத்துவம் (Power of Attorney) அல்லது சபை தீர்மானம் ஆகியவற்றின் மூலம் பொருத்தமானவாறு உதவியைப் பெறலாம்.

(இ) உதவித் தொழில்நுட்பம்: உதவித் தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு ஆதரவளிப்பதற்காக எங்கள் வளாகத்திற்குள் வசதிகளையும் கட்டமைப்பையும் நாங்கள் வழங்குகிறோம்.


 

4. கையொப்பம் சரிபார்ப்பு

கையொப்பங்கள், மின்னணு கையொப்ப முறைகள் உட்பட, தெளிவானவை மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என்பதை வங்கி உறுதி செய்கிறது. கையெழுத்திட முடியாத வாடிக்கையாளர்களுக்கு, பெருவிரல் அடையாளங்கள் வழக்கமான கையொப்பங்களுக்கு இணையான செல்லுபடியாகும் தன்மையுடன் நடத்தப்படுகின்றன. எங்கள் தரப்படுத்தப்பட்ட சரிபார்ப்பு செயல்முறை எங்கள் கிளை வலையமைப்பு முழுவதும் நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.


 

5. புகாரளித்தல் மற்றும் கையாளுதல்

உங்கள் கருத்துக்களை நாங்கள் மதிக்கிறோம். அணுகல்தன்மை குறித்து ஏதேனும் கவலைகள் இருந்தால், ஏதேனும் பாகுபாட்டை அனுபவித்தாலோ அல்லது மேலதிக விவரங்கள்/உதவி தேவைப்பட்டாலோ, எங்கள் தலைமை அலுவலகத்தில் உள்ள வாடிக்கையாளர் அனுபவ மேலாளரை (Customer Experience Manager) நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

 

தொடர்பு விபரங்கள்:

முகவரி : 
வாடிக்கையாளர் அனுபவ மேலாண்மை பிரிவு, 
இலங்கை வங்கி, 
22வது தளம், இல.1, 
இலங்கை வங்கி மாவத்தை, 
கொழும்பு 01.

தொலைபேசி : 011-2435814 / 011-2204750 / 011-2204751 (வேலை நேரங்களில் மட்டும்)

தொலைநகல் : 011-2435815

மின்னஞ்சல் : bocexmgt@boc.lk

இணையதளம் : இலங்கை வங்கியின் இணையதளத்தில் (www.boc.lk) உள்ள “இணையவழி வாடிக்கையாளர் உறவுப் படிவம்” (Online Customer Relations Form)- ஐப் பூர்த்தி செய்வதன் மூலம்.

உங்கள் பிரச்சினைகளை விரைவாகவும் திறம்படவும் தீர்ப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், மேலும் இந்த செயல்முறை முழுவதும் உங்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.