FATCA பற்றிய அறிவித்தல்

FATCA என்றால் என்ன?

ஐக்கிய அமெரிக்கப் பிரஜைகள் (ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே வசிப்பவர்கள் உட்பட) தம்மைப் பற்றிய தகவல்களையும் தமக்கு ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே உள்ள வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களையும் நிதிசார் குற்றங்கள் அமலாக்கத்துறை வலையமைப்புக்குச் (FINCEN) சமர்ப்பிக்க வேண்டும் என்றும் (ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே உள்ள) அனைத்து வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் (FFI's) சந்தேகத்துக்குரிய ஐக்கிய அமெரிக்கப் பிரஜைகளின் சொத்துக்களையும் அடையாளங்களையும் ஐக்கிய அமெரிக்க திறைசேரிக்கு அறிவிக்கும் பொருட்டு அவர்கள் தொடர்பான தகவல்களைத் தேடவேண்டும் என்றும் வலியுறுத்தும் ஐக்கிய அமெரிக்காவின் கூட்டாட்சிச் சட்டமே வெளிநாட்டுக் கணக்கு வரிச் சட்டம் (FATCA) ஆகும்.

இலங்கை வங்கியின் வகிபாகம்

FATCA ஒழுங்குமுறைக்கு இணங்க, இலங்கை வங்கி 2014.07.1 முதல் FATCA இன் கீழ் பங்குபெறும் வெளிநாட்டு நிதி நிறுவனமாக (PFFI) மாறியுள்ளது.

FATCA உடன்படிக்கையின் கீழ் இலங்கை வங்கிக்கு கீழ்க்காணும் பொறுப்புகள் காணப்படுகின்றன.

  • ஐக்கிய அமெரிக்கப் பிரஜைகளை அடையாளங்காணல்
  • தொடர்புபட்ட தகவல்களை ஐக்கிய அமெரிக்காவின் உள்நாட்டு இறைவரிச் சேவைகள் பிரிவுக்கு அறிவித்தல்

இந்தச் சட்டத்திற்கு இணங்கத் தவறினால் அல்லது ஒத்துழைக்கத் தவறினால் அவ்வாறான நபர்களின் கணக்குகளுக்கான குறிப்பிட்ட சில கொடுப்பனவுகளில் 30 வீதமானவை நிறுத்தி வைக்கப்படும். FATCA இலங்கையில் இயங்கும் அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு (கடல்கடந்த) நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

 

ஐக்கிய அமெரிக்கப் பிரஜைகள்

ஐக்கிய அமெரிக்கப் பிரஜை என்ற பதம் கீழ்க்காணும் வகைகளின்கீழான நபர்களைக் குறிக்கும்

  • ஐக்கிய அமெரிக்கப் பிரஜை ஒருவர்
  • ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமையுடன் இரட்டைக் குடியுரிமையுள்ள நபர் ஒருவர்
  • ஐக்கிய அமெரிக்காவின் நிரந்தர வதிவுரிமை (Green Card வைத்திருப்போர்) பெற்ற ஐக்கிய அமெரிக்கப் பிரஜை அல்லாத ஒருவர்
  • நேரிற் சமூகமளிப்புச் சோதனையை (Substantial presence test) நிறைவுசெய்த நபர்கள்
  • வெளிநாட்டு நபரல்லாத எந்தவொரு நபரும்

படிவங்கள்

  • W-9 - ஐக்கிய அமெரிக்கப் பிரஜைகள் அல்லது வதிவுரிமை பெற்றவர்கள்
  • W-8BEN - ஐக்கிய அமெரிக்க வரி நிறுத்திவைப்பு மற்றும் அறிக்கையிடலுக்கான பயன்பெறு உரிமையாளரின் (தனிநபர்கள்) வெளிநாட்டு அந்தஸ்த்துச் சான்றிதழ்
  • W-8BEN-E - ஐக்கிய அமெரிக்க வரி நிறுத்திவைப்பு மற்றும் அறிக்கையிடலுக்கான பயன்பெறு உரிமையாளரின் (நிறுவனங்கள்) வெளிநாட்டு அந்தஸ்த்துச் சான்றிதழ்
  • ஐக்கிய அமெரிக்கப் பிரஜை/கள் பிரகடனம் - ஐக்கிய அமெரிக்கப் பிரஜைகள் ஐக்கிய அமெரிக்காவின் உள்நாட்டு இறைவரிச் சேவைகள் பிரிவுக்கு தொடர்புபட்ட தகவல்களை வெளிப்படுத்துவதற்கான அதிகாரம்.
  • ஐக்கிய அமெரிக்கப் பிரஜை/கள் அல்லாதோர் பிரகடனம் - ஐக்கிய அமெரிக்கப் பிரஜை/கள் அல்லாதோர் உறுதிப்படுத்தல். 
     

ஐக்கிய அமெரிக்கப் பிரஜையை / வதிவுரிமையாளரை அடையாளங் காணல்

ஐ.அ.பிரஜையை / வதிவுரிமையாளரை அடையாளங் காணல்

தேவையான  ஆவணங்கள் 

ஐ.அ.பிரஜை / வதிவுரிமையாளர்

W-9 மற்றும் ஐக்கிய அமெரிக்கப் பிரஜை/கள் பிரகடனம்

ஐக்கிய அமெரிக்க வரி நிறுத்திவைப்பு மற்றும் அறிக்கையிடலுக்கான பயன்பெறு உரிமையாளரின் (தனிநபர்கள்) வெளிநாட்டு அந்தஸ்த்து


 

W-8BEN

ஐக்கிய அமெரிக்க வரி நிறுத்திவைப்பு மற்றும் அறிக்கையிடலுக்கான பயன்பெறு உரிமையாளரின் (நிறுவனங்கள்) வெளிநாட்டு அந்தஸ்த்து


 

W-8BEN-E

ஐக்கிய அமெரிக்கப் பிரஜை/கள் அல்லாதோர்

ஐக்கிய அமெரிக்கப் பிரஜை/கள் அல்லாதோர் பிரகடனம்

 

மேலதிகத் தகவல்களுக்கு

http://www.irs.gov/Businesses/Corporations/Foreign-Account-Tax-Compliance-Act-FATCA

 Notice

விண்ணப்பப் படிவங்கள்

Download W-8BEN - ஐக்கிய அமெரிக்க வரி நிறுத்திவைப்பு மற்றும் அறிக்கையிடலுக்கான பயன்பெறு உரிமையாளரின் (தனிநபர்கள்) வெளிநாட்டு அந்தஸ்த்துச் சான்றிதழ்

Download W-8BEN-E - ஐக்கிய அமெரிக்க வரி நிறுத்திவைப்பு மற்றும் அறிக்கையிடலுக்கான பயன்பெறு உரிமையாளரின் (நிறுவனங்கள்) வெளிநாட்டு அந்தஸ்த்துச் சான்றிதழ்

Download W-9 - ஐக்கிய அமெரிக்கப் பிரஜைகள் அல்லது வதிவுரிமை பெற்றவர்கள்

Download ஐக்கிய அமெரிக்கப் பிரஜை/கள் அல்லாதோர் உறுதிப்படுத்தல்

Download ஐக்கிய அமெரிக்கப் பிரஜைகள் ஐக்கிய அமெரிக்காவின் உள்நாட்டு இறைவரிச் சேவைகள் பிரிவுக்கு தொடர்புபட்ட தகவல்களை வெளிப்படுத்துவதற்கான அதிகாரம்