கொள்கை | விவரம் | நடைமுறைப்படுத்துதல் |
|---|---|---|
பணிப்பாளர் சபை பற்றிய விடயங்கள் தொடர்பான கொள்கை (சபை சாசனம்) | மூலோபாயங்களையும் வங்கியின் ஆளுகையையும் மேற்பார்வை செய்வதில் பணிப்பாளர் சபைக்கு உள்ள பொறுப்புகளையும் வகிபாகங்களையும் வரையறுக்கின்றது. | சபை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கூடுகின்றது. செயற்திறன் வருடாந்தம் மதிப்பாய்வு செய்யப்படுகின்றது. சட்டதிட்டங்களுக்கு அமைவாக செயற்படுகின்றமை உறுதிப்படுத்தப்படுகின்றது. |
சபைக் குழுக்கள் தொடர்பான கொள்கை | குழுக்களின் வினைத்திறன்மிக்க நிர்வாகத்தினையும் அவை ஒழுங்குமுறைகளுக்கு அமைவாக ஒழுகுமாற்றையும் உறுதிசெய்யும் பொருட்டு பல்வேறு சபைக் குழுக்களின் பொறுப்புகளையும் வகிபாகங்களையும் வரையறுக்கின்றது. | குழுக்கள் அவற்றின் சாசனங்களுக்கமைய கூடுகின்றன. சபைக்கு அறிக்கையிடுகின்றன. சட்டதிட்டங்களுக்கு அமைவாக செயற்படுகின்றமை உறுதிப்படுத்தப்படுகின்றது. |
பெருநிறுவன ஆளுகை, பெயர் நியமனம் மற்றும் தேர்தல் தொடர்பான கொள்கை (பெருநிறுவன ஆளுகைக் கொள்கை) | இது ஆளுகை தொடர்பான அனைத்துக் கொள்கைககளையும் உள்ளடக்குவதோடு பணிப்பாளர்களின் நியமனம் தொடர்பான கொள்கையையும் உள்ளடக்குகின்றது. | பெருநிறுவன ஆளுகை தொடர்பான சட்ட திட்டங்கள் கடைப்பிடிக்கப்படுவதனை உறுதிசெய்கின்றது. தேர்தல் நடைமுறைகள் அரச வழிகாட்டல்கள்களின் படி நிர்வகிக்கப்படுகின்றன. |
பணிப்பாளர்களின் ஊதியம் தொடர்பான கொள்கை மற்றும் முக்கிய முகாமைத்துவ உறுப்பினர்களுக்கான ஊதியம் தொடர்பான கொள்கை | அரச கொள்கைக்கு அமைவாக பணிப்பாளர்கள் மற்றும் முக்கிய முகாமைத்துவ உறுப்பினர்களின் ஊதியம் தொடர்பான வழிகாட்டல்களை வரையறுக்கின்றது. | அரசாங்க வழிகாட்டல்களின் அடிப்படையிலேயே பணிப்பாளர்களுக்கான ஊதியம் வழங்கப்படுகின்றது. முக்கிய முகாமைத்துவ உறுபினர்களுக்கான ஊதியம் மனிதவளம் மற்றும் ஊதியக் குழுவினால் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மீளாய்வு செய்யப்பட்டு சபைக்குப் பரிந்துரைக்கப்படுகின்றது. |
உள்ளக வியாபார நடைமுறை மற்றும் அறநெறிக் கோவை தொடர்பான கொள்கை
பணிப்பாளர்களுக்கும் பிற ஊழியர்களுக்கும் என இருவேறு கொள்கைகள். | பணிப்பாளர்களுக்கும் ஏனைய ஊழியர்களுக்கும் இருக்கவேண்டிய அறம் மற்றும் நேர்மைத் திறம் என்பவற்றுக்கான நியமங்களை வரையறுக்கின்றது. | பணிப்பாளர்கள் இணக்கம் தொடர்பில் வருடாந்த சான்றுப்படுத்தலை மேற்கொள்கின்றனர். ஊழியர்களுக்கு கிரமமாக பயிற்சியளிக்கப்படுகின்றது. உள்ளகக் கணக்காய்வு அணி இணக்கம் தொடர்பில் கண்காணிக்கின்றது.
|
ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவம் தொடர்பான கொள்கை | இடர்களை அடையாளங்கண்டு முகாமை செய்வதற்கான சட்டகம் பற்றி விவரிக்கின்றது. | இடர் மதிப்பீடுகள் மாதம் ஒரு முறையும் காலாண்டுக்கு ஒரு முறையும் நடாத்தப்படுகின்றன. |
பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடனான உறவுகள் தொடர்பான கொள்கை (தொடர்பாடற் கொள்கை) | ஏக பங்குதாரரான அரசாங்கம் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் ஈடுபடுவதற்கான நடைமுறையை விவரிக்கின்றது. | ஆண்டறிக்கைகள் வெளியிடப்படுவதோடு பங்குதாரர்களுடனான ஈடுபாடு முகாமை செய்யப்படுகின்றது. |
சூழல், சமூகம் மற்றும் ஆளுகை என்பவற்றின் நிலைபேறாண்மை தொடர்பான கொள்கை | நிலைபேறாண்மை தொடர்பிலும் சூழல், சமூகம், ஆளுகை என்பன சார்ந்த செயற்பாடுகள் தொடர்பிலும் வங்கி கொண்டுள்ள ஈடுபாட்டு உறுதியில் கவனம் செலுத்துகின்றது. | நிலைபேறாண்மைக் குழு சூழல், சமூகம், ஆளுகை என்பன தொடர்பான முன்னெடுப்புகளை மேற்பார்வை செய்து அவற்றின் முன்னேற்றம் தொடர்பில் அறிக்கையிடுகின்றது. |
நிறுவனச் சொத்துக்கள் கட்டுப்பாடு மற்றும் முகாமைத்துவம் தொடர்பான கொள்கைகள் | நிறுவனச் சொத்துக்கள் கட்டுப்பாடு, முகாமைத்துவம் மற்றும் முதலீடுகள் என்பவற்றை நிர்வகிக்கின்றது. | சொத்து முகாமைத்துவம் வருடாந்தம் மீளாய்வு செய்யப்படுகின்றது. முதலீட்டுத் தீர்மானங்கள் மூலோபாய இலக்குகளுடன் இணங்குகின்றமை உறுதிசெய்யப்படுகின்றது. |
பெருநிறுவன வெளிப்படுத்தல்கள் தொடர்பான கொள்கைகள் | பங்குதாரர்களுக்கும் கட்டுப்பாட்டுச் சபைகளுக்கும் துல்லியமான வெளிப்படுத்தல்கள் தாமதமின்றி மேற்கொள்ளப்படுவதனை உறுதிசெய்கின்றது. | வெளிப்படுத்தல்கள் கொள்கைக்கு அமைவாக மேற்கொள்ளப்படுகின்றன. |
அறமீறல்களை அம்பலப்படுத்துதல் தொடர்பான கொள்கை | அறமற்ற நடத்தைகளை அநாமதேயமாக முறையிடுவதனை ஊக்குவிக்கின்றது. | இவ்வாறு முறையிடுவதற்கு விசேட அழைப்பு எண் காணப்படுகின்றது. CIA இனால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு கணக்காய்வுக் குழுவினால் மீளாய்வு செய்யப்படுகின்றது. |
இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்புத் தொடர்பான கொள்கை | அனைத்து வியாபார நடவடிக்கைகளிலும் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக பூச்சிய வீத சகிப்புத் தன்மையை வலியுறுத்துகின்றது. | இலஞ்சத்துக்கு எதிரான பயிற்சிகள். கிரமமான கணக்காய்வுகள். இணக்கம் பற்றிய கண்காணிப்புகள். |