director-image

திரு. தர்ஷன குணசேகர

சுயாதீன நிறைவேற்றலற்ற பணிப்பாளர்

திரு. தர்ஷன குணசேகர 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்துறை தலைமைத்துவ அனுபவம் பெற்ற பெருநிறுவன நிறைவேற்றுனர் ஆவார். இவர் MJF குழுமத்தின் குழு நிதி பணிப்பாளராகவும் தில்மா சிலோன் டீ கம்பனி PLC நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார். இவர் 2015 ஆம் ஆண்டு தில்மா நிறுவனத்தின் பிரதான நிதி அதிகாரியாக இணைந்து கொண்டார். 2020 ஒக்டோபர் மாதம் அந்நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டார். 

FMCG, தேயிலை மற்றும் தோட்டங்கள், உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆடைத் துறை மற்றும் நிதி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான பணிப்பாளராகவும் உயர்மட்ட நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார். இவர் பெருநிறுவன நிதி, ஒன்றிணைத்தல் மற்றும் விலைக்கு வாங்குதல், வணிக மாற்றம், முதலீட்டாளர் தொடர்புகள், நிறுவன இடர் முகாமைத்துவம், தரவுப் பகுப்பாய்வு மற்றும் டிஜிற்றல் நிதி ஆகிய துறைகளில் விரிவான நிபுணத்துவத்தை கொண்டுள்ளார். மூலதன கட்டமைப்பை மேம்படுத்தல், இருப்புநிலை மறுசீரமைப்பு, ஆற்றல் நிலைத்தன்மை மாற்றங்கள், நிதி மற்றும் நிர்வாக அமைப்புகளை அமல்படுத்தல், நிறுவன அளவிலான மாற்றுத் திட்டங்கள் போன்ற பல்வேறு மூலோபாய திட்டங்களை வெற்றிகரமாக வழிநடாத்தியுள்ளார்.

திரு.குணசேகர அவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் CIMA  மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் ACCA ஆகியவற்றின் மாணவ உறுப்பினராவார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் சான்றளிக்கப்பட்ட பொது கணக்காளர்கள் (AICPA) நிறுவகத்தினது CGMA தொழில்முறை பதவியையும் கொண்டுள்ளார். இவர் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளமானி (B.Sc.) பட்டத்தை பெற்றுள்ளதுடன், ஐக்கிய இராச்சியத்தின் சந்தைப்படுத்தல் பட்டய நிறுவகத்தில் CIM (UK) முதுநிலை டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். திரு. குணசேகர கஹவத்த பிளாண்டேஷன்ஸ் PLC மற்றும் தலவக்கலை டீ எஸ்டேட்ஸ் PLC ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளராகவும் உள்ளார்.  

இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பல தனியார் துறை நிறுவனங்களில் பணிப்பாளராக உள்ளார். மேலும், இலங்கை சர்வதேச வர்த்தக சபையின் (ICC-SL) ஒழுங்கு மற்றும் நெறிமுறைகள் குழுவின் தலைவராகவும், அதன் கொள்கை நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றுகிறார். திரு.குணசேகர அவர்கள்  நீண்டகால மதிப்பு உருவாக்கம் மற்றும் பொறுப்பான வளர்ச்சியை மையமாகக் கொண்ட தொடக்க நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதோடு, பெருநிறுவன மற்றும் தொழில்துறை தளங்களில் நிலைத்தன்மை மற்றும் ESG நிகழ்ச்சி நிரல்களை உருவாக்குவதிலும் மூலோபாய பங்கை வகிக்கிறார்.