இது 60 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளுக்கென கூடிய வட்டியுடனும் பாதுகாப்புடனும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நிலையான வைப்புக் கணக்காகும். 

  • குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ. 10,000/-
  • காலம் - 1 வருடம்
  • அதிக வட்டி விகிதம் (தயவுசெய்து நிலையான வைப்பு விகிதங்களைப் பார்க்கவும்)
  • வட்டி செலுத்துதல் - முதிர்வில் அல்லது மாதாந்தம் 
  • நியமனம் - கணக்கு வைத்திருப்பவரின் மரணத்தின் போது மீதித் தொகையை வழங்க ஒரு நபரையோ நபர்களையோ பரிந்துரைக்கலாம்.  
     
விதிகளும் நிபந்தனைகளும்
  1. கணக்குத் திறக்கும் போது வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு மாறாக, வைப்புக் காலத்தின் முடிவிற்கு குறைந்தது ஏழு நாட்களுக்கு முன்பாக கணக்குரிமையாளரால் வங்கிக்கு எழுத்துப்பூர்வ அறிவுறுத்தல் வழங்கப்பட்டாலேயன்றி, தனது தற்றுணிபின் அடிப்படையிலும் வங்கியால் காலத்திற்கு காலம் நிர்ணயிக்கப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டும் (வட்டி வீதம் அடங்கலாக)  நிலையான வைப்பினை வட்டியுடன் அல்லது வட்டியில்லாது மேலும் ஒரு தவணைக்கும் அடுத்துவரும் தவணைகளுக்கும் புதுப்பிக்கும் அதிகாரம் வங்கிக்கு உண்டு. 
  2. கணக்குரிமையாளர் வைப்புக் காலம் முடிவடைவதற்கு முன்பே வைப்புத்தொகையை மீளப் பெற்றால் கணக்குரிமையாளருக்கு வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த வட்டி வீதத்தில் மட்டுமே வட்டி வழங்கப்படும். முழுக் காலத்திற்கும் உரிய அதிக வட்டி வீதத்தில் மாதாமாதம் வட்டி பெறப்பட்டிருந்தால், அதிகமாக வழங்கப்பட்ட வட்டியை முதல் தொகையிலிருந்து அல்லது மீளப் பெறும் நேரத்தில் செலுத்த வேண்டிய மீதி வட்டியிலிருந்து கழிக்கும் உரிமை வங்கிக்கு உண்டு.
  3. வங்கியால் கணக்குரிமையாளருக்கு வழங்கப்படும் நிலையான வைப்புச் சீட்டு மாற்றப்படக்கூடியதல்ல. மூல வைப்புச் சீட்டு வங்கியிடம் ஒப்படைக்கப்படும் வரை வைப்புத் தொகை வெளியிடப்படமாட்டாது. எனினும், கணக்குரிமையாளரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு சந்தேகத்திற்கு இடமின்றி அவர் மீது நன்னம்பிக்கை உருவான பின்னர் கூடுதல் ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு வங்கி தனது தற்றுணிபின் அடிப்படையில் முதிர்வுக்குப் பின்னர் நிதிகளை வெளியிடலாம்.
  4. நிலையான வைப்புச் சீட்டு தொலைந்துபோனால், உடனடியாக எழுத்துமூலமாக வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும்.
  5. விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட அஞ்சல் முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் தொடர்பு இலக்கம் உள்ளிட்ட எந்தவொரு தகவலிலும் மாற்றம் ஏற்பட்டால், கணக்குப் பேணப்படும் கிளைக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
  6. தகவல்களை மாற்றுவதற்கான சரியான எழுத்துமூல அறிவித்தல் வங்கிக்குக் கிடைக்கும் வரை கீழே குறிப்பிடப்பட்டுள்ள கணக்கை இயக்கும் அறிவுறுத்தல்கள், நடைமுறையிலிருக்கும் எனக் கருதப்படும்.
  7. வங்கியானது, வங்கியின் இணையத்தளத்தின் (www.boc.lk) ஊடாக கணக்குரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்குவதன்மூலம் கணக்குப் பராமரிப்புத் தொடர்பான விதிகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றலாம், திருத்தலாம் அல்லது சேர்க்கலாம். இந்த அறிவித்தல்கள் கணக்குரிமையாளருக்கு உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்ட அறிவித்தலாகக் கருதப்படும். அவ்வாறு மாற்றப்பட்ட, திருத்தப்பட்ட அல்லது சேர்க்கப்பட்ட விதிகள் நடைமுறைக்கு வரும் தருணத்திலிருந்து கணக்குரிமையாளர் அவற்றைப்  பின்பற்ற வேண்டும்.
  8. ஒழுங்குமுறைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக வங்கியானது கணக்குரிமையாளரிடம் தகவல்களைக் கோரலாம். கணக்குரிமையாளர் அத்தகவல்களைப் போதுமான வகையில் வழங்க வேண்டும். தேவையான தகவல்கள் வழங்கப்படாவிட்டால், வங்கியானது கணக்கின் செயற்பாடுகளை இடைநிறுத்தலாம்.
  9. இக்கணக்கானது இலங்கை மத்திய வங்கியின் பணிப்புரைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கும் காலத்திற்கு காலம் திருத்தப்படக்கூடிய நாட்டின் சட்டங்களுக்கும் உட்பட்டிருக்கும்.
  10. கணக்குரிமையாளர் அந்நியச் செலாவணிச் சட்டம் (Foreign Exchange Act), அந்நிய நாணயக் கணக்கு நடத்தை மற்றும் வெளிநாட்டு கணக்கு வரி இணக்க சட்டம் (Foreign Account Tax Compliance Act - FATCA) என்பவற்றை ஆளும் வங்கியின் விதிகள் ஆகியவற்றைப் பின்பற்ற  வேண்டும்.
  11. கணக்குரிமையாளர் எழுத்துமூல வேண்டுகோளின் மூலம் கணக்கை மூடலாம்.
  12. வங்கியானது எந்த நேரத்திலும் கணக்குரிமையாளருக்கு எழுத்துமூல அறிவித்தலை  வழங்குவதனூடாக கணக்கை மூடலாம் என்பதோடு மோசடி நடவடிக்கைகள், சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் அல்லது தவறான தகவல்கள் வழங்கப்பட்டதாக வங்கி சந்தேகித்தால், அறிவித்தலின்றியும் கணக்கை மூடலாம்.
  13. வாடிக்கையாளருக்கு இலத்திரனியற் கூற்றுகள் (e-Statements) அனுப்புவதால் வங்கி, வங்கியின் அடுத்தகட்ட உரிமையாளர்கள், ஒப்படைப்பாளர்கள், முகவர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு நட்டம், இழப்பீடு, வட்டி, செலவு, கட்டணம் முதலான பாதிப்புகளிலிருந்து வங்கியைக் காப்பளித்துப் பாதுகாப்பதற்கு கணக்குரிமையாளர் உறுதியளிக்கிறார்.
  14. வங்கியானது, தன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டண அட்டவணையின் படி, பொருந்தக்கூடிய சேவைக் கட்டணங்களை (Service Charges) கணக்கிலிருந்து கழிக்கும்.

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444