வேகமும் வசதியும் மிக்க பரந்த அளவிலான வங்கிச் சேவைகளை வாடிக்கையாளருக்கு வழங்கும் அடுத்த தலைமுறைக்கான சேமிப்புக் கணக்காக BOC SMARTGEN கணக்கு கருதப்படுகின்றது. இந்த SMARTGEN கணக்கை உடனடியாகத் திறக்க முடியும் என்பதோடு திறந்த மாத்திரத்திலேயே முழுமையாகச் செயற்படுத்தவும்படும்.

  • சாதாரண சேமிப்புக் கணக்கு, 14+ கணக்கு, 18+ கணக்கு, காந்தா ரண் கினும்  கணக்கு மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் கணக்கு முதலான கணக்குகளை SMARTGEN கணக்காக மாற்றிக்கொள்ளலாம்.
  • நாடு முழுவதும் உள்ள எந்தவொரு BOC கிளையிலும் கணக்கைத் திறக்கும் போதே வாடிக்கையாளர்களின் புகைப்படமும் கையொப்பமும் டிஜிட்டல் முறையில் எடுக்கப்படுவதனால் வாடிக்கையாளர்கள் தங்குதடையின்றி தமது வங்கிச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
     
அம்சங்கள்
  • பாஸ்புக் இல்லாத கணக்கு
  • இலவசமாகவும் உடனடியாகவும் இணைய வங்கி வசதி / B app என்பவற்றைப் பயன்படுத்தும் வசதி
  • பரிவர்த்தனைகள் தொடர்பான உடனடி SMS செய்திகள் 
  • மாதாந்த மின்னஞ்சல் அறிக்கைகள்
  • வாடிக்கையாளர்களின் புகைப்படமும் கையொப்பமும் டிஜிட்டல் முறையில் எடுக்கப்படும்
  • உடனடியாகக் கணக்கைத் திறக்கும் வசதி
  • கணக்குத் திறக்கும் போதே செயற்படுத்தப்பட்ட டெபிட் அட்டை வழங்கப்படும் 
     
நன்மைகள்
  • (14+கணக்குகள் தவிர) ஏனைய கணக்குகளுக்கு இணைய வங்கிச் சேவைகள் உடனடியாக செயற்படுத்தப்படும்  
  • இலவச இணைய வங்கி வசதி / B app வசதி                                
  • பரிவர்த்தனைகள் பற்றிய உடனடி SMS அறிவுறுத்தல்கள் (இச்சேவைக்குக் கட்டணம் எதுவும் விதிக்கப்படாது)
  • மாதாந்த மின்னஞ்சல் அறிக்கைகள்
  • டெபிட் அட்டை உடனடியாக வழங்கப்பட்டு செயற்படுத்தப்படும்
வட்டி வீதங்களும் கட்டணங்களும்
  • குறித்த கணக்கின் SmartGen வடிவத்துக்கும் அதே வட்டி விகிதங்களே பொருந்தும்.
தேவையான ஆவணங்கள்
  • தேசிய அடையாள அட்டை
  • முகவரிச் சான்று (தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் வசிக்கவில்லை என்றால்)
  • கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி (எஸ்எம்எஸ் அறிவுறுத்தல்கள் மற்றும் மின்னஞ்சல் அறிக்கைகளுக்காக)


மேலதிகத் தகவல்களுக்கு அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளையைத் தொடர்பு கொள்ளவும்

நிபந்தனைகளுக்கு உட்பட்டது

இணையவழியில் கணக்கைத் திறக்கவும்
விண்ணப்பத்தை இங்கே பதிவிறக்கவும்

Terms and Conditions
  1. சாதாரண சேமிப்பு, 14+, 18+, காந்தா ரண் கினும் மற்றும் மூத்த பிரஜைகள் கணக்குகளை மட்டுமே அவற்றுடன் தொடர்புடைய BOC SmartGen கணக்காக மாற்றலாம்.
  2. BOC SmartGen கணக்குகளைத் தொடர்புடைய கணக்கு வகையின் ஸ்மார்ட் அல்லாத வடிவத்திற்கு மாற்ற இயலாது.
  3. BOC SmartGen கணக்குகளை கணக்குத் தொடங்கப்பட்ட கிளையில் மட்டுமே மூட முடியும்.
  4. இக்கணக்​கைத் தொடங்க தேசிய அடையாள அட்டை,  கைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பன கட்டாயமாகும்.
  5. வட்டி விகிதம், சேவைக் கட்டணங்கள், சலுகைகள் மற்றும் விதிகள், நிபந்தனைகள் என்பன தொடர்புடைய சேமிப்புக் கணக்குத் திட்டங்களுக்கு ஒத்தவையாகும்.
  6. இக்கணக்குகளுக்கு கணக்குப் புத்தகங்கள் வழங்கப்படமாட்டா. கணக்கு விவரங்கள் மற்றும் பரிவர்த்தனைகளை இலத்திரனியல் அறிக்கைகள் மற்றும் வங்கியின் பிற டிஜிட்டல் தளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444