முதன்முறையாக  இலங்கையில் இஸ்லாமிய வங்கியியல் என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்திய இலங்கை வங்கி புகழ்பெற்ற ஷாரி'ஆ  அறிஞர்களையும் ஒரு பிரத்தியேக திறைசேரிச் செயற்பாட்டையும் கொண்ட ஷாரி'ஆ  மேற்பார்வைச் சபையின் (SSB) மேற்பார்வையின்கீழ் இஸ்லாமிய வங்கிச் சேவையை வழங்கப்படுகின்றன.


SSB இன் உறுப்பினர்கள்

  • அஸ்-ஷேக் எம் ஐ எம் ரிஸ்வி முfப்தி
  • அஸ்-ஷேக் எம் எச் எம் யூசுப் முfப்தி
  • அஸ்-ஷேக் முர்ஷித் முலாஃபர்
  • அஸ்-ஷேக் பாசில் பாரூக்


வங்கித் துறையில் ஏழு தசாப்தகால அழுபவமிக்க நிபுணர்களின்  ஆதரவுடன் இவ்வணிக முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமிய வங்கிச் சேவையை முன்னெடுத்துச் செல்வதற்கு தேர்ச்சிபெற்ற அணி ஒன்றைத் தேர்ந்தெடுத்துள்ளது. முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதிகள் ஷரி'ஆவுக்கு இணக்கமான முதலீடுகள் மூலம் வெளிப்படையான முறையில் நிர்வகிக்கப்படுகின்றன. BOC AN-NOOR கணக்குகளையும் சேவைகளையும் பெருநிறுவனங்கள்.  தனிநபர்கள் என அனைவரும் பாரபட்சமின்றிப் பெற்றுக்கொள்ள முடியும்.


முதலீடுகளும் கணக்குகளும்

BOC AN-NOOR வைப்பு மற்றும் முதலீட்டுப் பிரிவின்கீழ் பல கணக்குகள் காணப்படுகின்றன. இக்கணக்குகள் யாவும் இலாபப் பகிர்வு பொறிமுறையின்கீழ் பேணப்படுவதால் அறவழி ஒழுகும் மன அமைதி உங்களுக்கு கிடைக்கிறது. மக்கள் எம்மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எமது கணக்குகள் அனைத்து இலங்கையர்களுக்கும் பொதுவானவை.

நீண்ட காலமாக செயற்பாட்டில் இருக்கும் இஸ்லாமிய வங்கிப் பிரிவைக் கொண்ட இலங்கை வங்கி, தமது வாடிக்கையாளர்களின் வங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்ய பரந்த அளவிலான இஸ்லாமிய வங்கிச் சேவைகளை வழங்குவதில் பெருமிதம் அடைகின்றது.

எமது அனைத்து இலங்கை வங்கிக் கிளைகளிலும் BOC AN-NOOR பிரிவின் கீழ் ஷரி’ஆ முறைமைக்கு அமைவாக உங்களது வைப்புக்கள் மற்றும் நிதித்தேவைகள் ஆகிய இரண்டும் உள்ளிட்ட நிதிச்சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். 

உங்கள் பொருளாதார நலனுக்கும் நம்பிக்கைக்கும் முக்கியத்துவமளிக்கும் இலங்கை வங்கியுடன் இணைந்து தனித்துவமான சேவைகளை அனுபவியுங்கள்.

 

வைப்புகள்

 

முதலீடுகள்:

 

மேலதிக சேவைகள்:

  • பல்வேறு சேனல்கள் மூலம் எல்லையற்ற அணுகல் மற்றும் பரிவர்த்தனை வாய்ப்புகள்.
  • ஹலால் முறையிலான அனுகூலங்களை வழங்கும் நம்பகமான சேமிப்பு ஒப்பந்தங்கள்.
  • நிதிப்பரிமாற்ற வசதிகள், பயன்பாட்டு பில் கொடுப்பனவுகள் மற்றும் நிலுவை தொடர்பான விசாரணைகள்.

 

மேலதிகத் தகவல்களுக்கு அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளையைத் தொடர்பு கொள்ளவும்

 

தொடர்பு விவரங்கள் 

இஸ்லாமிய வங்கிப் பிரிவு
T:  011 220 5014, 5031, 5035, 5038, 5039
  +94 11 220 5030
 மின்னஞ்சல்: ibu@boc.lk

 

நிபந்தனைகளுக்கு உட்பட்டது

AN-NOOR Mudaraba சேமிப்புக் கணக்கு (ரூபாய்)
  • "Mudaraba " என்ற பெயரில் செயல்படுகின்றது.
  • தனிப்பட்ட (தனிப்பட்ட மற்றும் இணைந்த)
  • தனிப்பட்ட நிறுவனங்கள் அல்லாத அதாவது சங்கங்கள், சமூக ஒன்றியங்கள், கூட்டாண்மைகள், தனி உரிமையாளர்கள், பங்குதாரர்கள், வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சேமிப்புக் கணக்கைத் திறக்க, செயல்படுத்த  தகுதியுள்ள பிற பெருநிறுவனங்கள் .
  • இலாபப் பகிர்வு வீதம் (PSR) -வைப்பாளருக்கும் வங்கிக்கும் இடையே 45:55 
  • 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களும் தகுதி பெறுவார்கள்.
  • ATM/DEBIT, இணையதள வங்கியியல், குறுந்தகவல் போன்ற சேவைகளை அனைத்து இலங்கை வங்கிக் கிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாம். 
AN-NOOR Athfal சேமிப்புக் கணக்கு (சிறுவர்களுக்கானது )
  • சிறுவர்களுக்கான கணக்குகள், " Mudaraba " என்ற பெயரில் செயல்படுகின்றது.
  • இலங்கையிலுள்ள 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு அவர்களது பெற்றோர்/பாதுகாவலர்களால் இந்த கணக்கைத் திறக்க முடியும்.
  • இலாபப் பகிர்வு வீதம் (PSR) -வைப்பாளருக்கும் வங்கிக்கும் இடையே 50:50
AN-NOOR வெளிநாட்டு நாணய சேமிப்புக் கணக்கு
  • " Mudaraba " என்ற பெயரில் செயல்படுகின்றது.
  • உள்ளுர் வங்கிப் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பின்வரும் நாணயங்களால் கணக்குகளைத் திறக்கலாம்.
    USD - US Dollar
    GBP - Sterling Pounds
    EUR - Euro
  • இலங்கைப் பிரஜையான சிறுவர் உள்ளிட்ட ஒரு தனிநபர், இலங்கைக்கு வெளியில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சிறுவர் உள்ளிட்ட ஒரு தனிநபர் , இலங்கையில் வசிக்கும் சிறுவர் உள்ளிட்ட இலங்கையர் அல்லாதவர்
  • வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோர்களால் சிறுவர்களின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கணக்குகள். 
  • இலாபப் பகிர்வு வீதம் (PSR) -வைப்பாளருக்கும் வங்கிக்கும் இடையே 45:55, மற்றும் சிறுவர்  க/ குகளுக்கு 50:50.
  • ATM/DEBIT, இணையதள வங்கியியல், குறுந்தகவல் போன்ற சேவைகளை அனைத்து இலங்கை வங்கிக் கிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாம். 
AN-NOOR நடைமுறைக் கணக்கு
  • “Qard " என்ற பெயரில்; செயல்படுகின்றது.
  • தனிப்பட்ட (தனிப்பட்ட மற்றும் இணைந்த)
  • தனிப்பட்ட நிறுவனங்கள் அல்லாத அதாவது சங்கங்கள், சமூக ஒன்றியங்கள், கூட்டாண்மைகள், தனி உரிமையாளர்கள், பங்குதாரர்கள், வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சேமிப்புக் கணக்கைத் திறக்க, செயல்படுத்த தகுதியுள்ள பிற பெருநிறுவனங்கள் .
  • ATM/DEBIT, இணையதள வங்கியியல், குறுந்தகவல் போன்ற சேவைகளை அனைத்து இலங்கை வங்கிக் கிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாம். 
Wakala Bil Istismar (முதலீட்டு நிறுவன ஒப்பந்தம்)
  • ஷரி’ஆ நிபந்தனைகளுக்கமைய பரிவர்த்தனைகளில் வங்கியின் முதலீடுகளுக்கு வாடிக்கையாளர் ஒரு முகவராகச் செயல்படும் முகவர் நிலையத்தின் ஒப்பந்தம்.

    உதாரணமாக - நடைமுறை மூலதனத் தேவை அல்லது வணிகத்துக்கான நிதிமுகாமைத்துவத்தினை பூர்த்தி செய்ய.
Murabaha (செலவு மற்றும் விற்பனை ஒப்பந்தம்)
  • முன்கூட்டியே இணங்கிக் கொண்ட இலாபத்துக்கு விற்கப்படும் விற்பனை ஒப்பந்தம்.
  • மொத்தமாக அல்லது தவணைகளில் செலுத்தலாம்.

    உதாரணம் - பொருட்கள் மற்றும் சொத்துக்களை வாங்குதல்.
Ijara (லீசிங்)
  • மாதாந்த வாடகை செலுத்துதலுடன் சொத்துக்களை குத்தகைக்கு பெறுவதற்கு.
  • வாடகைக் காலத்தின் முடிவில் வாடிக்கையாளருக்குச் அச்சொத்து பரிசாக வழங்கப்படும்.

    உதாரணம்- வாகனங்கள்/இயந்திரங்கள்

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444