அரச பல்கலைக்கழகங்கள் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் உயர்கல்வி நிறுவனங்கள் / வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டப்பின் படிப்பைத் தொடர விரும்புபவர்களுக்கு அற்புதமான வாய்ப்பு.
தகுதி
- நிரந்தர மாதச் சம்பளமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் பல்கலைக்கழகங்கள்/உயர்கல்வி நிறுவனங்களில் அல்லது புகழ்பெற்ற சர்வதேச பல்கலைக்கழகங்களில் பட்டப்பின் படிப்பைத் தொடர விருப்பமும் உள்ள நபர்கள்.
வட்டி வீதம்
- இலங்கை வங்கியின் பொதுவான கல்விக் கடனைவிட 1 % குறைந்த வட்டி.
https://www.boc.lk/rates-tariff#advance-rates → கல்விக் கடன்
ஆகக் கூடிய மீளச்செலுத்தும் காலம்
- ஆகக் கூடியது 05 ஆண்டுகள் (சலுகைக் காலம் இல்லை)
ஆகக் கூடிய கடன் தொகையும் பிணை ஆவணங்களும்
- ஒரு மில்லியன் ரூபாய் அல்லது கற்கை நெறிக் கட்டணத்தில் 80% என்ற இரண்டு தெரிவுகளில் எது குறைவோ அந்தத் தொகை.
வங்கியால் ஏற்றுக்கொள்ளத்தக்க இரண்டு நபர்களின் கூட்டு மற்றும் தனி உத்தரவாதம்.
ஆயினும் பொருத்தமான அசையா ஆதனத்தை ஈடுவைக்கும் போது மொத்த கற்கைநெறிக் கட்டணத்தில் 90 % வழங்குவதற்கு வங்கி கருத்திற்கொள்ளலாம். - பத்து மில்லியன் ரூபாய் அல்லது கற்கை நெறிக் கட்டணத்தில் 90% என்ற இரண்டு தெரிவுகளில் எது குறைவோ அந்தத் தொகை.
பொருத்தமான அசையா ஆதனத்தை ஈடுவைத்தல்
*நிபந்தனைகளுக்கு உட்பட்டது
இவ்வசதியில் ஏதேனும் நிபந்தனைகள், விதிமுறைகள் அல்லது கூற்றுகளை மாற்றுவதற்கு, சேர்ப்பதற்கு அல்லது திருத்துவதற்கான அதிகாரத்தினை இலங்கை வங்கி கொண்டுள்ளது.
மேலதிக விவரங்களுக்கு அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளையின் முகாமையாளரைத் தொடர்பு கொள்க அல்லது 1975 எனும் இலக்கத்தினூடாக எமது அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்க.

