- திறைசேரி முறி என்பது (T-bond) இலங்கை அரசாங்கம் சார்பாக இலங்கை மத்திய வங்கியினால் (CBSL) வழங்கப்படும் நீண்டகால நிதிச் சாதனமாகும்.
- இது 2 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரையான முதிர்வு காலத்தைக் கொண்டது.
- ரூ.100/- என்ற பெயரளவுப் பெறுமதிக்கு வழங்கப்படும் கூப்பன் பத்திரமே திறைசேரி முறி (T-bond) ஆகும்
- கூப்பன் கொடுப்பனவுகள் அரை ஆண்டு அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
நன்மைகள்
- முதலீடு மற்றும் முதிர்வு வருமானம் அரசாங்கத்தால் உறுதி செய்யப்படும்.
- நிறுத்தி வைக்கும் வரி இல்லை.
தேவையான ஆவணங்கள்
புதிய தனி நபர் / கூட்டு முதலீட்டாளர்களுக்கு
- முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
- அரச பத்திரங்களுக்கான வாடிக்கையாளர் ஒப்பந்தம் - வாடிக்கையாளர் ஒப்பந்தத்திற்கான இரண்டு பிரதிகள் பூர்த்தி செய்யப்பட்டு முறையாக கையொப்பமிடப்பட வேண்டும்.
- தேசிய அடையாள அட்டை / சாரதி அனுமதிப்பத்திரம் / கடவுச்சீட்டு என்பவற்றின் பிரதி
- முகவரியை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் (வழங்கப்பட்ட முகவரி தேசிய அடையாள அட்டை / செயற்படுத்தப்படும் வங்கி கணக்குகளிலிருந்து வேறுபட்டால்)
புதிய நிறுவனம் / சங்கம் / கழகத்திற்கு
- முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.
- அரச பத்திரங்களுக்கான வாடிக்கையாளர் ஒப்பந்தம் - வாடிக்கையாளர் ஒப்பந்தத்திற்கான இரண்டு பிரதிகள் பூர்த்தி செய்யப்பட்டு முறையாக கையொப்பமிடப்பட வேண்டும்.
- இலங்கை வங்கியின் அரச பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான அங்கீகாரம் உட்பட சபையின் தீர்மானம்.
- கூட்டிணைப்புச் சான்றிதழ்
- அதிகாரமளிக்கப்பட்டவர்களின் கையொப்பங்களுடன் சமர்ப்பித்தல்
பொதுவான தகவல்கள்
- இலங்கை வங்கியில் பேணப்படும் நடைமுறைக் கணக்கு அல்லது சேமிப்பு கணக்கு ஊடாக பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
- திறைசேரி முறியின் குறைந்தபட்ச பெறுமதி ரூபாய் 1,000,000/- (முகப் பெறுமதி)
- விண்ணப்பங்கள் திறைசேரிப் பிரிவிற்கு முற்பகல் 10.30 மணிக்கு முன் சென்றடைய வேண்டும்.
- எந்தவொரு பண மீள்பெறுதலுக்காகவும் திறைசேரிப் பிரிவுக்கு நீங்கள் முறையான கோரிக்கையை முன் வைக்கலாம் என்பதுடன் உங்கள் திறைசேரி முறிகளுக்கு நடைமுறையில் உள்ள சந்தை விலையில் தள்ளுபடிகள் வழங்கப்படும்.
விகிதங்கள்
- நிலையான வருமானப் பிணைகள் (FIS) வணிகரைத் தொடர்புகொள்ளவும்
தொடர்புகளுக்கு
திறைசேரி,
7ஆவது மாடி,
இலங்கை வங்கித் தலைமை அலுவலகம்,
இல. 01 இலங்கை வங்கிச் சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை,
கொழும்பு – 01, இலங்கை.
தொலைபேசி - 011 220 3650
தொலைபேசி - 011 220 3607
தொலைநகல் - 011 244 5788

