இலங்கை வங்கியானது வாய்ப்புக்களைச் சரியாகப் பயன்படுத்தி மூலதனமிடல், முக்கிய தொடர்புகளை வளர்த்துக் கொள்ளல், இடர்களைக் குறைத்தல் மற்றும் உங்கள் தொழிற்படு மூலதனத் தேவைக்கு நிதி வழங்குதல் என்பவற்றில் உங்களுக்கு உதவுவதற்காக பலவிதமான வர்த்தக விநியோகத் தொடர் சேவைகளை வழங்குகின்றது.
எங்கள் சேவைகளும் தீர்வுகளும்.
- சந்தையில் அதிகமான பரிமாற்ற விகிதங்கள், குறைந்தபட்ச தரகு விகிதங்கள் மற்றும் வட்டி விகிதங்கள்.
- விநியோகத் தொடர் சேவைகளை மேம்படுத்துவதற்காக உங்களுடைய முக்கிய பங்குதாரர்களுக்கான நிதி உதவி.
- விரைவான சேகரிப்புகள்.
- டிஜிட்டல் வர்த்தகத் தீர்வு (இணைய வாடிக்கையாளர் மையம்) மூலமாக வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வழங்குநரை இணைத்துக்கொள்ளுதல் என்பவற்றை டிஜிட்டல் மயமாக்குதல்.
- அதிகளவான இணைப்பு வங்கிகளைக் கொண்ட மிகப்பெரிய வலையமைப்பு.
- வர்த்தகம் தொடர்பான தொழில் சார் ஆலோசனைகள்.

