RTGS மற்றும் SLIPS
உங்கள் வசதிக்கேற்ப பணம் அனுப்பும் வசதிகள்
பணம் அனுப்புவதிலுள்ள நன்மைகள்
- குறைவான ஆவண வேலைகள்
- வேகமான தீர்ப்பனவுகள்
- செலவுக் குறைப்பு
- உயர் பயன்
- மனிதவலு சேமிப்பு
- அதிக நெகிழ்வுத் தன்மையும் வசதித் தன்மையும்
- பிணக்குகள், விசாரணைகள், தாமதமான தீர்ப்பனவுகள், கணக்கியல் பணிகள் மற்றும் நிறுவனங்களின் ஏடுகளுக்கு இணக்கம் காணல் ஆகியவற்றைக் குறைத்தல்
நிகழ்நேர மொத்தத் தீர்ப்பனவுக் கட்டமைப்பானது (RTGS) வாடிக்கையாளர்களின் வேண்டுகோளிற்கேற்ப ஏனைய வங்கிகளுக்கு நிதிகளை அனுப்புவதற்காக எங்கள் வங்கிக் கிளை வலையமைப்பினால் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. RTGS என்பது நிகழ்நேர அடிப்படையில் வங்கிகளுக்கிடையே நடைபெறும் நிதி மாற்றல் முறைமையாகும். RTGS முறைமையானது இடர் கட்டுப்பாட்டுக்கான பாதுகாப்பு அம்சங்கள் பலவற்றையும் சர்வதேச தர நிலைகளையும் கொண்டு காணப்படுகின்றது.
நன்மைகள்
- இலத்திரனியல் மற்றும் கணினி அடிப்படையில் பணம் அனுப்பும் வசதியும் தீர்ப்பனவு முறைமையும்.
- விரைவானதும் பாதுகாப்பானதுமான நிதி மற்றும் பத்திரங்கள் அனுப்பும் செயல்முறை.
- எந்தவொரு தனிநபரோ அல்லது வர்த்தக நிறுவனமோ வேறு தரப்பினருக்கு விரைவான கொடுப்பனவை மேற்கொள்ளவே விரும்புகின்றனர்
- கொடுக்கல் வாங்கல்கள் நிகழ் நேர அடிப்படையில் தீர்க்கப்படுகின்றன.
நடைமுறைகள்
- இலங்கை வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாதிரிப் படிவத்துடன் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விகிதங்களும் கட்டணங்களும்
- ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 400/-.
மேலும் தகவல்களுக்கு
0112203106
ft@boc.lk
இலங்கை வங்கியினால் வழங்கியின் SLIPS கொடுப்பனவு வசதியானது (இலங்கையிலுள்ள வங்கிகளுக்கிடையேயான கொடுப்பனவு முறை) இலங்கை ரூபாயிலுள்ள ஊழியர் சம்பளங்கள், பங்கிலாபக் கொடுப்பனவுகள், ஏனைய வங்கிக் கடன்களின் மீள் கொடுப்பனவு, நிதி அனுப்பல்கள், பிற கொடுப்பனவுகள் என்பவற்றை இலங்கையிலுள்ள வலையமைப்பைப் பயன்படுத்தி மிகவும் பாதுகாப்பான முறையில் ஒரு சில வினாடிகளுக்குள் இலங்கை வங்கியிலோ அல்லது வேறு ஏதேனும் வங்கியிலோ உள்ள வேறொரு ரூபாய் கணக்கிற்கு அனுப்புவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.
நன்மைகள்
- வங்கிகளில் வைப்புச் செய்வதற்கு பணமாக கையில் எடுத்துச் செல்வதால் ஏற்படும் ஆபத்து குறைக்கப்படுகிறது.
- இலங்கை வங்கியின் இணைய வங்கி (Internet banking) நடைமுறை மூலமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
- அதிகபட்ச பரிவர்த்தனை எல்லை இலங்கை ரூபா 5.00 மில்லியன் (ஒரு பரிவர்த்தனைக்கு)
- பரிவர்த்தனையை மு.ப 11:30 மணிக்கு முன்னர் மேற்கொண்டால் அதே நாளில் பணம் அனுப்பப்படும்.
- பி.ப 5.00 மணிக்கு முன்னர் மேற்கொண்டால் அடுத்த வேலை நாளில் பணம் அனுப்பப்படும்.
நடைமுறைகள்
- கோரிக்கை கடிதம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- கொடுக்கப்பட்ட மாதிரியின் படி கோப்பு அனுப்பப்பட வேண்டும்.
விகிதங்களும் கட்டணங்களும்
பல பண அனுப்பல்களுக்கு (உரைக் கோப்பு)
- பட்டியலில் உள்ள ஒவ்வொரு வரவுக்கும் ரூ. 15/-
(ஒவ்வொரு diskette க்கும் குறைந்தபட்ச பெறுமதி ரூபா 75/- ஆகவும் கொடுக்கல் வாங்கல்களில் குறைந்தபட்ச எண்ணிக்கை 5 ஆகவும் இருக்க வேண்டும்)
தனிப் பரிமாற்றத்திற்கு
- இணைய வங்கி மூலம் - ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலுக்கும் ரூபா 20/-.
- நேரடியான கோரிக்கை மூலம் - ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலுக்கும் ரூபா 50/
(ஒரு நாளைக்கான அதிகபட்ச நேரடிக் கொடுக்கல் வாங்கல்கள் ஒரு கோரிக்கைக்கு 5 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது)
மேலதிகத் தகவல்களுக்கு
0112203116, 0112203124
pbo660@boc.lk
தந்திவழி அனுப்பல்கள்
வாடிக்கையாளர்கள் உள்நாட்டில் அல்லது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களில் பணத்தை அனுப்ப முடியும்.
மேலதிகத் தகவல்களுக்கு
0112203120
csm660@boc.lk
ஏனைய சேவைகளை அறிய
வர்த்தக சேவைகள் பற்றிய மேலோட்டமான பார்வை
இலங்கை வங்கி வர்த்தக சேவைகளுடன் திறம்பட வர்த்தகம் செய்யுங்கள்
விரிவாக வாசிக்க
இறக்குமதி வசதிகள்
எமது இறக்குமதிச் சேவைகளுடன் இணைந்து உங்கள் வியாபாரத்தை விரிவாக்குங்கள்
விரிவாக வாசிக்க
கடல் கடந்த வங்கிச்சேவை
எப்போதும் முன்னணி வகிக்க உங்களுக்குத் தேவையான நிதித் தீர்வுகள்.
விரிவாக வாசிக்க
கடல்கடந்த கணக்குகளும் வெளிநாட்டுப் பணக் கொடுக்கல் வாங்கல்களும்
உலகளாவிய பரிவர்த்தனைக்கு
விரிவாக வாசிக்க

