Flex Saver என்பது இலங்கை வங்கியின் புதிய வாடிக்கையாளர்களுக்கான ஒரு வசதியான டிஜிட்டல் சேமிப்புக் கணக்காகும். கிளைக்குச் செல்லாமலேயே, Flex கைபேசி வங்கிச் செயலி  மூலம் Video KYC (VKYC) முறையைப் பயன்படுத்தி "Sign Up" செய்வதன் ஊடாக டிஜிட்டல் முறையில் இக்கணக்கைத் திறக்க முடியும். அத்துடன் உங்கள் வங்கித் தேவைகளுக்காக 24/7 பாதுகாப்பான சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.

 

அம்சங்கள்

  • ஆரம்ப வைப்புப் பணம் எதுவுமின்றி கணக்கைத் திறக்கும் வசதி
  • சாதாரண சேமிப்பு வட்டி வீதம் 
  • Flex கைபேசி வங்கிச் செயலி  மூலம் எந்நேரமும் கணக்கிற்கான அணுகல்
  • ஏனைய வங்கிக் கணக்குகளுக்கு இலகுவாகப் பணத்தை அனுப்பவும் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
  • செயலி மூலமான கொடுப்பனவுகள், POS, E-commerce மற்றும் ATM பரிவர்த்தனைகள்
  • நிகழ் நிலையில் பணப் பரிமாற்றம் செய்து, இணையவழி நிலையான வைப்புக் கணக்குகளை உருவாக்கும் வசதி.
  • நிலையியற் கட்டளைகள் மற்றும் கட்டணக் கொடுப்பனவுகளை வாடிக்கையாளரே மேற்கொள்ளும் வசதி
  • இலத்திரனியற் கூற்றுக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் ஊடாக பரிவர்த்தனை விபரங்கள்
  • கொடுப்பனவு  நினைவூட்டல்கள் மற்றும் செலவுகளையும்  வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களையும் கண்காணிக்கும் வசதி
  • ATM, அட்டை இல்லாப் பண மீளப்பெறல் மற்றும் வங்கிக் கருமபீடங்கள் மூலமாகப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதி
நன்மைகள்
  • கணக்கைத் திறப்பதற்கு வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
  • Flex செயலி மூலம் 24/7 கணக்கை முழுமையாக நிர்வகிக்கலாம்.
  • வசதியான டிஜிட்டல் சேமிப்பு மற்றும் கொடுப்பனவுத் தீர்வுகளை அனுபவிக்கலாம்.
  • உங்களது செலவுகள், கொடுப்பனவுகள் மற்றும் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களை இலகுவாகக் கண்காணிக்கலாம்.
  • மேலதிக நிதியை உடனுக்குடன் இணையவழி நிலையான வைப்புக் கணக்கிற்கு மாற்றலாம்.
தகைமைகள்

Flex Saver கணக்கை பின்வருவோர் ஆரம்பிக்கலாம்:

  • 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இலங்கையர்கள்.
  • இலங்கை வங்கியில் தற்போது எந்தவொரு கணக்கையும் வைத்திருக்காத புதிய வாடிக்கையாளர்கள்.
  • Flex கைபேசி வங்கிச் செயலியின்  Video KYC (VKYC) மூலம் இணைந்துகொண்ட வாடிக்கையாளர்கள்.

குறிப்பு: தனிநபர் கணக்குகள் மாத்திரமே அனுமதிக்கப்படும். கூட்டுக் கணக்குகள் அனுமதிக்கப்பட மாட்டாது. 

தேவையான ஆவணங்கள்
  • தேசிய அடையாள அட்டை (NIC)
  • முகவரியை உறுதிப்படுத்தும் ஆவணம் (தேவைப்படின்)
  • விண்ணப்பதாரரின் செல்ஃபீ (Selfie) புகைப்படம்
  • விண்ணப்பதாரரின் கையொப்பம்
  • தேவையான KYC/CDD விபரங்கள்
  • TIN
விதிகளும் நிபந்தனைகளும்
  • Flex Saver கணக்கை தகுதியுடைய புதிய இலங்கை வங்கி வாடிக்கையாளர்கள் மட்டும் இலங்கை ரூபாயில் (LKR) திறக்கலாம்.
  • இக்கணக்கானது சாதாரண சேமிப்புக் கணக்கிற்குரிய குறைந்தபட்ச மீதி, வட்டி வீதம், கட்டணங்கள் மற்றும் வரிகளுக்கு உட்பட்டது.
  • கணக்குப் புத்தகம் வழங்கப்பட மாட்டாது. கோரிக்கையின் பேரில் பற்றட்டைகளைப் (Debit Cards) பெற்றுக்கொள்ளலாம்.
  • SMS விபரங்கள் தானாகவே செயற்படுத்தப்படும் என்பதோடு அதற்கான கட்டணங்கள் அறவிடப்படும்.
  • நியமனதாரரை நியமித்தல், பற்றட்டையைப் பெற்றுக்கொள்ளுதல், செயலற்ற கணக்குகளை மீண்டும் செயற்படுத்துதல், கணக்கை மூடுதல் மற்றும் அடையாள அட்டை விபரங்களை மாற்றுதல் போன்ற சில சேவைகளுக்குத் தொடர்புடைய கிளைக்கு நேரில் செல்ல வேண்டும்.
  • இலங்கை வங்கியின் சாதாரண சேமிப்புக் கணக்குகளுக்குப் பொருந்தும் ஏனைய அனைத்து விதிகளும் வங்கியின் கொள்கைகளும் ஒழுங்குமுறைகளும் Flex Saver கணக்கிற்கும் பொருந்தும்.

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444