PIEZE – ஒற்றைக் கட்டண இடைமுகம் (Single Payment Interface)
PIEZE என்பது இ-வணிக வர்த்தகர்களுக்கு தடையற்ற கட்டணங்களை ஏற்றுக்கொள்ளும் வசதியை வழங்கும் ஒரு ஒன்றிணைந்த கட்டண வசதியாகும். இத்தீர்வானது அரசாங்க நிறுவனங்கள் மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான வியாபாரங்கள் உட்பட இலத்திரனியல் வணிகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு இவ்வசதியை வழங்குகிறது.
இ-வணிக வர்த்தகர்களுக்கான நன்மைகள்
- PIEZE என்பது பாரம்பரிய இணைய கட்டணத் தளங்களுக்கான மாற்றாகும். IPGகள், QR கட்டணங்கள், கட்டணச் செயலிகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் இருந்து நேரடியாக மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகள் என்பவற்றை ஒரே இடைமுகத்தில் வழங்கும் வசதியை இச்செயலி வழங்குகிறது.
- PIEZE உள்ளார்ந்த வணிகத் தளத்தின் மூலம், வணிகங்கள் தங்கள் கட்டணப் பரிவர்த்தனைகள் பற்றிய பெறுமதிமிக்க புரிதலைப் பெற முடியும் என்பதால் அவர்களால் தெளிவான முடிவுகளை எடுக்கவும், அதன் மூலம் வளர்ச்சியை அதிகரிக்கவும் முடியும்.
- PIEZE ஆனது சிக்கல்கள் இல்லாத சுமூகமான கட்டண அனுபவத்தை வழங்குவதால் வணிகர்கள் தங்கள் வாடிக்கையாளர் சேவைகளைத் திறம்பட மேற்கொள்வதில் கவனஞ்செலுத்த முடியும்.
- PIEZE செயலியானது பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்கும் சிக்கல்கள் இல்லாத அதிநவீன கட்டண தீர்வுகளுக்கான வாய்ப்பை வழங்கும் புரட்சிகர கொடுப்பனவுச் செயலி ஆகும்.
இச்செயலியைப் பயன்படுத்துவதற்கான தகுதி
இலங்கையில் பொருட்கள் அல்லது சேவைகளை வழங்கும் செல்லுபடியான மற்றும் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வணிகத்தில் ஈடுபட்டுள்ள இலத்திரனியல் வணிகர்கள்.
Pieze.lk உடன் தங்கு தடையற்ற கட்டண முறைமையை அனுபவிக்கவும்
இன்னும் ஏதேனும் கேள்வி இருக்கிறதா?
எங்கள் Pieze உதவிக் குழுவைத் தொடர்பு கொள்ளவும்
தொடர்பு எண் : 011-2205608