மனிதவள முகாமைத்துவம்

இலங்கை வங்கியுடன் இணைந்து உங்கள் எதிர்காலத்தை வளமாக்குங்கள்

BOC HR Management

வங்கித் துறையில்  முன்னணி வங்கி என்ற வகையில் நாட்டின் வங்கித் துறையை எர்காலத்துக்குத் திறம்பட எடுத்துச் செல்லவல்ல ஈடுபாட்டுறுதிமிக்க நபர்களை வளர்த்தெடுக்கும் அனைவரையும் உள்ளடக்கிய பணிச் சூழலை நாம் வழங்குகிறோம்.

இலங்கை வங்கியில் உள்ள ஆளணியினரின் பல்வகைத்​தன்மை, அதன் பல்வேதைரப்புகளையும் சேர்ந்த வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வங்கி காட்டும் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. வங்கியின் மனிதவளக் கொள்கையானதுஆரோக்கியமான பணிக் கலாச்சாரத்தைப் பேணுவதற்கும் திறமையுள்ள நபர்களை உள்ளீர்ப்பதற்கும் நிறுவனத்திற்குள் சிறந்தவொரு பணிச்சூழலை நிறுவப்பட்டுள்ளமையை உறுதி செய்கிறது. 30-35 வயதிற்கு இடைப்பட்ட சராசரி வயதுடைய ஊழியர்களை அதிகளவிற் கொண்டிருப்பதால்  வங்கியும் இளமைத் துடிப்புடன் செயலாற்றி வருகிறது.

நிறுவன  கலாச்சாரம்

ஊக்கமளிப்பது / ஆற்றல்மிக்கது / புத்தாக்கம்மிக்கது​

 

BOC HR Management

ஊழியர்களுக்கான மதிப்புருவாக்கம்

ஆரோக்கியமான தொழில் - வாழ்க்கை சமநிலையுடன் ஊழியர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் கலப்பின வேலை மாதிரிகளை தொடர்ந்து ஆய்வு செய்யும் அதே வேளையில், வங்கியை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் டிஜிட்டல் மயமாக்கலில் ஆர்வமும்செயற்திறனும் மிக்க ஆளணியினரை உருவாக்குவதே இலங்கை வங்கியின் முதற்கண் நோக்கமாகும். தேசத்தின் எதிர்காலத் தலைவர்கள் என்ற வகையில், வளர்ந்து வரும் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த திறன்களை நமது மக்களுக்கு வழங்குவதில் வங்கிகவனம் செலுத்தும்.
 

விரிவாக வாசிக்க

நியாயமான தொழில் நடைமுறைகள்
வங்கியின் மனித வளக் கொள்கை நாட்டின் தொழிலாளர் சட்டங்களுக்கு இணங்க உருவாக்கப்பட்டுள்ளது என்பதோடு உலகளாவிய சிறந்த பெருநிறுவன நடைமுறைகளால் வழிநடத்தப்படுகிறது. இலங்கை வங்கி பொது முகாமையாளரின் தலைமையிலான மனிதவளக் கொள்கைக் குழுவைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த மனிதவள மூலோபாயம் மற்றும் கொள்கைகள் பற்றிய பரிந்துரைகளுக்கு சபை மட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படுகின்றது. நியாயமான ஊதியக் கொள்கைகளின்படி, பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான அடிப்படைச் சம்பள விகிதம் 1:1 ஆகும். எங்கள் கொள்கைகளின் படிபணியாளர்கள் தமது தொழில் முன்னேற்றத் திட்டத்துடன் கட்டமைக்கப்பட்ட செயற்திறன் மதிப்பீட்டிற்கு உட்பட்டு தகுதி பதவி உயர்வு பெறுகின்றனர்.


பாதுகாப்பான தொழிற் சூழல்
அனைத்து நிரந்தர ஊழியர்களும் விரிவான ஒரு  மருத்துவ நலன் திட்டத்திற்கு தகுதியுடையவர்களாவர்.இதில் மருத்துவ உதவி, வெளிநோயாளிகளுக்கான சிகிச்சை, மருத்துவமனை அனுமதி என்பவற்றுக்கான செலவை ஈடுசெய்தல் என்பவற்றை உள்ளடக்கியது. வங்கியின் மனிதவளக் கொள்கை எந்த விதமான பாலியல் துன்புறுத்தலையும் பொறுத்துக் கொள்ளாது. வங்கியில் ஊழியர்களின் குறைகளை நிறைவேற்றுவதற்கான தனியானவொரு கொள்கையையும் காணப்படுகிறது. நிர்வாக மட்டத்தில் 42% பெண் பிரதிநிதித்துவம் மற்றும் ஒப்பீட்டளவில் மகப்பேற்று விடுப்பில் இருந்து பணிக்கு அதிக வருவாய் கிடைத்தல் போன்ற பெண்கள் செழிக்கக்கூடிய சூழலை இந்தக் கொள்கைகள் உறுதி செய்கின்றன.


பயிற்சி மற்றும் அபிவிருத்தி என்பவற்றுக்கான வாய்ப்பு
வங்கி கைக்கொள்ளும் கடுமையான கொள்கைகள் அனைத்து ஊழியர்களுக்கும் பயிற்சி மற்றும் மேம்பாட்டிற்கான சம வாய்ப்புகள் கிடைப்பதனை உறுதி செய்கின்றன.


நட்ட ஈடும் நன்மைகளும் 
சம்பளத்துக்கு மேலதிகமாக  பல நன்மைகளை வழங்குவதன் மூலம் ஊழியர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்து  அவர்களுக்கு தொடர்ச்சியாக உறுதுணையாக இருத்தல்.


பல்வகைத் தன்மையை மதித்தல்
நாட்டின் பன்மைத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், அனைத்து இன மத மற்றும் சமூக-பொருளாதாரப் பின்னணிகளையும் சேர்ந்தஊழியர்களைக் நாட்டின ஒன்பது மாகாணங்களிலும் இருந்து தேர்ந்தெடுத்துப் பணியமர்த்தியிருப்பதன் மூலம் வலுவான ஒரு ஊழியர் படையைக் கொண்டுள்ளது. வெளிநாட்டு கிளைகள் அவை தொழிற்படும் நாட்டிலிருந்து சிறந்த திறமையான ஊழியர்களைப் பெறுகின்றன. பாலினப் பாகுபாடற்ற   நாட்டின் முன்னணி நிறுவனம் என்ற வகையில் இலங்கையின் வங்கித் துறையில் 60% பெண் ஊழியர்களைக் கொண்ட வங்கி நிறுவனங்களில் ஒன்றாக இலங்கை வங்கி காணப்படுகிறது.

சுருக்கமாக வாசிக்க
BOC HR Management

நாட்டின் வங்கி மற்றும் நிதித் துறையில் முன்னணியில் இருக்கும் முதற்தர வங்கியான இலங்கை வங்கி சேவை மனப்பாங்கும் தகைமைகளும் கொண்ட நபர்களுக்காக தன் கதவுகளை அகலத் திறந்து வைத்துள்ளது. எங்கள் வங்கிக் குழாமில் நீங்களும் ஒரு பகுதியாக இருக்க விரும்பின் எங்கள்  பதவி வெற்றிடங்களைப் பார்வையிட்டு விண்ணப்பிக்கவும்.

» பதவி வெற்றிடங்கள்