நட்டத்திற் செல்லும், செயலிழந்த ஆனால் மீண்டெழுவதற்குச் சாத்தியமான தகுதிகளைக் கொண்ட வியாபாரங்களுக்கு அவற்றுக்கும் வங்கிக்கும் நன்மை பயக்கவல்ல வகையில் தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்கும் பொருட்டு வங்கிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான பாலமாக செயற்படும் ஒரு சிறப்பு பிரிவாக இவ்வியாபாரப் புத்துயிர்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பிரிவு (BRRU) 2021ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.  

வியாபாரப் புத்துயிர்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பிரிவின் முக்கிய இலக்குகள்

  • நிலையான பொருளாதாரம் என்ற நீண்டகால இலக்குடன் வியாபாரத் தொடர்ச்சி மற்றும்  வியாபாரத்தை ஓர்சீர்ப்படுத்தல் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காக புதியதோர் வியாபாரப் புத்துயிர்ப்பு மற்றும் மறுசீரமைப்புக் கலாசாரத்தை உருவாக்குதல்
  • நட்டத்திற் செயற்படும், செயலிழந்து இருக்கும் வியாபாரங்களுக்கு எல்லா வகையான நிதி உதவிகளையும் வழங்குதல்
  • வியாபாரத்தை முன்னெடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் வாடிக்கையாளர்களின் வியாபாரங்களுக்குப் புத்துயிரூட்டுவதற்குப் பொருத்தமான பொறிமுறையை உருவாக்குதல்
  • ஏற்றுமதி தொடர்பான வியாபாரங்களை மீழெழுச்சி பெறச்செய்வதில் சிறப்புக் கவனம் செலுத்தி நாட்டின் வெளிநாட்டு நாணய வருவாயை அதிகரிக்க உதவுதல்
  • பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு தற்போதுள்ள வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதற்கும் புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் நலிந்து செல்லும் வியாபாரங்களுக்கு உதவுதல்


வியாபாரப் புத்துயிர்ப்பிப்புச் செயன்முறையின் விரிவாக்கம் – பிராந்திய மட்டம்
தலைமையகத்தில் உள்ள புத்துயிர்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பிரிவின் உதவியுடன் நட்டத்திற் செல்லும், செயலிழந்த வியாபாரங்களை மீட்டெடுக்கவும் கண்காணிக்கவும் 11 மாகாணங்களையும் தனித்தனியாக உள்ளடக்கிய பிராந்தியக் கடன்  வலையமைப்பில் பதினான்கு (14) புத்துயிர்ப்பு மற்றும் மறுசீரமைப்பு  அலகுகள் உருவாக்கப்பட்டுள்ளன. வங்கியானது தற்போது விவசாயம், கட்டுமானம், வர்த்தகம், ஆடைத்தொழில், அரிசி ஆலை, உற்பத்தி, தயாரிப்பு போன்ற பல்வேறு வணிகத் துறைகளில் ஈடுபட்டு வருகிறது
 

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444